TAMIL

நீங்கள் சமாதான நீதவானை சந்திக்கும் போது தெரிந்து கொள்ள வேண்டியவை :

நீங்கள் எவற்றை கொண்டு வர வேண்டும்? சமாதான நீதவானால் என்ன எதிர்பார்க்கப்படுகிறது

கீழ்வருவனவற்றை தயவுசெய்து கவனத்தில் கொள்க:

  • வாடிக்கையாளர்கள் சேவை மேசைக்கு வரும் ஒழுங்கில் சமாதான நீதவானால் பார்க்கப்படுவார்கள்.
  • சான்றளிப்பு(certification) தேவைப்படும் வாடிக்கையாளர்கள் ஆவணத்தின் மூலப் பிரதியுடன், அதன் பிரதியையும் சேர்த்து வழங்க வேண்டும்.
  • தங்கள் அடையாள ஆவணம் (களை) சான்றளிப்பு செய்ய வேண்டிய வாடிக்கையாளர்கள் சமாதான நீதவானிடம் நேரடியாக வருகை தர வேண்டும்.
  • ஆவணத்தின் மூலப் பிரதி மின்னணு வடிவத்தில் இருந்தால்ஆவணத்தின் மூலப்  பிரதியை,  மின்னணு சாதனத்தில், சமாதான நீதவானுக்கு காட்டவேணும்.
  • சான்றளிப்பு ஆவணங்களின் எண்ணிக்கையை 10 ஆகக் கட்டுப்படுத்துவது வழக்கம். இருப்பினும், சமாதான நீதவான் தமது வசதிக்கேற்ப  பிரதிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவார்.
  • படிவங்கள் நிரப்பப்பட வேண்டும், ஆனால் தயவுசெய்து எந்த ஆவணத்திலும் முன்கூட்டியே கையொப்பமிட வேண்டாம்.
  • சமாதான நீதவானிடம் சமர்ப்பிக்க உங்கள் ஆவணங்கள் மற்றும் பிரதிகள்  வரிசைப்படுத்தி  வழங்குதல் நன்று.
  • கையொப்பம் சரிபார்க்கப்படும்போது முறையான அத்தாட்சி /சான்று  (ID) வழங்க வேண்டும்.

சில சேவைகள் சமாதான நீதிபதியின் அதிகார எல்லைக்குள் இருக்க மாட்டாது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com